ஜகதல்பூர் விமான நிலையத்திலிருந்து விமான சேவை தொடக்கம்.!

Default Image

சத்தீஸ்கர் மாநிலத்தின் ஜகதல்பூரிலிருந்து புதிய விமான சேவைகள் தொடங்குகின்றது.

சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் இன்று ஜக்தல்பூரில் உள்ள மா-தண்டேஸ்வரி விமான நிலையத்தின் மையத்தில் உதான் திட்டத்தின் கீழ் புதிய விமான சேவைகளை தொடங்கி வைத்தார்.ராய்ப்பூர் மற்றும் ஹைதராபாத் இடையே அலையன்ஸ் ஏர் சேவைகளை இயக்குகிறது.

மத்திய பிரதேசத்தில் பிலாஸ்பூர் மற்றும் போபால் இடையே விமானங்களை இயக்க சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி வழங்கியது. இந்நிலையில், 57.6 ஹெக்டேர் பரப்பளவில் ஜக்தல்பூரில் உள்ள மா டந்தேவாரி விமான நிலையம் அமைக்கப்பட்டது. மாநில பொதுப்பணித் துறை,  உள்கட்டமைப்பை உருவாக்கி, ஏஏஐ விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டை நிர்வகித்து வருவதாக முதல்வர் தெரிவித்தார்.

இதற்கு முன்பு, ஜக்தல்பூரிலிருந்து ராய்ப்பூர் மற்றும் புவனேஷ்வருக்கு சிறிய விமானங்கள் மூலம் விமான இணைப்பை வழங்க முடிவு செய்தனர். ஆனால், அது வெற்றிபெறவில்லை என்பதால் கடந்த நவம்பரில் நிறுத்தப்பட்டது.

 

 

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்