பாதுகாப்பு படையினரால் 4 பயங்கரவாதிகள் கொலை – பாகிஸ்தான் ராணுவம்.!

Default Image

பாகிஸ்தானில் நான்கு பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த 19-ஆம் தேதி தென்மேற்கு பலூசிஸ்தான் மாகாணத்தில் பாதுகாப்புப் படையினர் நான்கு பயங்கரவாதிகளை கொலை செய்துள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. பலூசிஸ்தானின் அவாரன் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் இருப்பதை உறுதி செய்வதற்காக பாதுகாப்புப் படையினர் உளவுத்துறை அடிப்படையிலான நடவடிக்கையை மேற்கொண்டபோது, நான்கு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

ராணுவத்தின் ஊடகப் பிரிவான இன்டர்-சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷனின் அறிக்கையில், பயங்கரவாதிகளின் மறைவிடமும், ஒரு தளவாட தளமும் அழிக்கப்பட்டன. அதே நேரத்தில் ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் ஆகியவை மீட்கப்பட்டன. ராணுவ அறிக்கையில் பயங்கரவாதிகளின் தொடர்பு பற்றிய தகவல்களை வழங்கவில்லை. நேற்று வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் வஜீரிஸ்தான் பகுதியில் பாதுகாப்புப் படையினர் ஒரு பயங்கரவாத தளபதியையும் மற்ற மூன்று பயங்கரவாதிகளையும் கொன்றதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்