மஹாராஷ்டிராவில் கொரோனாவை வென்ற 106 வயது மூதாட்டி!
மஹாராஷ்டிராவில் 106 வயது மூதாட்டி ஒருவர் கொரோனாவை வென்று வீடு திரும்பியுள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கம் மஹாராஷ்டிராவில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் 106 வயதுடைய மூதாட்டி ஒருவர் கொரோனா தொற்றால் சவ்லாரம் கிருதா சங்குலில் உள்ள டோம்பிவ்லி முனிசிபல் கார்ப்பரேஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வேறு எந்த மருத்துவமனையிலும் வயது முதிர்வை காரணம் காட்டி இவரை அனுமதிக்க மறுத்ததாக அவரது மருமகள் கூறியுள்ளார்.
இந்நிலையில், கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த இவர், தற்பொழுது கொரோனாவை வென்று குணமடைந்துள்ளார். இவரை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மிக அன்புடன் கவனித்து கொண்டதாகவும், அவர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளனர் குடும்பத்தினர். மருத்துவர்கள் மற்றும் அவரை கவனித்துக்கொண்டு செவிலியர்கள் மகிழ்ச்சியுடன் அவருக்கு பிரியாவிடை கொடுத்துள்ளனர்.