அண்ணா பெயரில் PhD மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை 16,000 நிறுத்தப்படுகிறதா?
அண்ணா பெயரில் PhD மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை 16,000 நிறுத்தப்படுகிறது என வெளியாகிய செய்திக்கு அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம்.
அண்ணா அவர்களின் பெயரில் ஆராய்ச்சி மாணவர்களுக்கு 16,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது, இனி இது நிறுத்தப்படும் செய்திகள் பரவி வந்தது. இந்நிலையில் ஜனவரி மாதம் முதல் இந்த உதவித் தொகை நிறுத்தப்படும் என வெளியாகிய செய்திக்கு அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்திர உதவித்தொகை நிறுத்தப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.
மேலும், இதுவரை வழங்கப்பட்டு வந்த 16,000 ரூபாய்க்கு பதிலாக 20,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் 4000 ரூபாய் கூடுதலாக கிடைக்குமே தவிர, நிறுத்தப்பாவில்லை. ஆனால், ஆராய்ச்சி மாணவர்களின் ஆராய்ச்சி சார்ந்த இதர செலவினங்களுக்காக ஆண்டொன்றுக்கு வழங்கப்பட்டு வந்த 25 ஆயிரம் ரூபாய்தான் நிறுத்தப்பட்டு உள்ளது என கூறப்பட்டுள்ளது. உதவி தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் இதர செலவினங்களுக்கான வழங்கப்பட்டு வந்த தொகை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.