துணை மின் நிலையங்களை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி.!
தமிழகத்தில் 25 துணை மின் நிலையங்களை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார்.
தமிழகத்தில் சென்னை, கோவை, ஈரோடு, கடலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருவள்ளூர், நாகை, சேலம், தஞ்சை, திருச்சி, திருவாரூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அமைக்கப்பட்ட துணை மின் நிலையங்களை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். ரூ.353.11 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 25 துணை மின்நிலையங்களை முதலமைச்சர் பழனிசாமி தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
இந்த திறப்பு விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி ஆகியோர் கலந்துகொண்டனர். நுங்கம்பாக்கம் பள்ளிக்கல்வி இயக்கக வளாகத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கட்டடத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். மேலும், பல மாவட்டங்களில் ரூ.9.70 கோடியில் கட்டப்பட்ட பள்ளிக் கட்டடங்களை திறந்து வைக்கப்பட்டது.