சீன நிறுவனங்களுக்கு உளவு பார்த்து தகவல் அனுப்பியதாக 3 பேர் கைது..!

Default Image

 சீன நிறுவனங்களுக்கு உளவு பார்த்து தகவல் அனுப்பியதாக டெல்லியில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியா – சீனா இடையே தற்போது எல்லைப் பிரச்னை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், இந்தியர்களின் தகவல்கள் திருடப்படுவதாகக் கூறி ‘டிக்டாக்’ உட்பட சீனாவைத் தலைமையிடமாக கொண்ட 100-க்கும் மேற்பட்ட செயலிகளை மத்திய அரசு தடை விதித்தது.

சமீபத்தில் இந்தியாவில் ஜனாதிபதி, பிரதமர், முதல்வர்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் என  10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களின் தகவல்களை சீன நிறுவனமான ஷென்சென் ஷென்ஹூவா உளவு பார்த்ததாக குறைப்படுகிறது.

இந்நிலையில், உளவு பார்த்த சீன நிறுவனங்களுக்கு தகவல் அனுப்பியதாக பத்திரிகையாளர் ராஜூவ்சர்மா, சீனப் பெண் மற்றும் நேபாளத்தைச்சேர்ந்த அவரது உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பகுதிநேர (ஃப்ரீலான்ஸ்) பத்திரிகையாளர் ராஜீவ் சர்மா  என்பவர்  இரகசிய ஆவணங்களை உளவு பார்த்து தகவல் அனுப்பியதாக அவர் குறித்து டெல்லி காவல்துறைக்கு ரகசிய தகவல்கள் கிடைத்ததது. இதனால், ரகசியங்கள் சட்டத்தின் கீழ் டெல்லி போலீசாரால்  கடந்த திங்களன்று கைது செய்யப்பட்டார்.

மறுநாள் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர், அவரை ஆறு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது. மூத்த பத்திரிகையாளரான சர்மா பல்வேறு செய்தித்தாள்கள் மற்றும் செய்தி நிறுவனங்களில் பணியாற்றி வந்துள்ளார்.

அவர் கைது செய்யப்பட்ட பின்னர், டெல்லி காவல்துறை அவரது மடிக்கணினி, அவரது மொபைல் போன் ஆகியவற்றைக் கைப்பற்றியதுடன், அவர் யாருடன் தொடர்பு கொண்டார் என்பதை அறிய அவரது அழைப்பு விவர பதிவுகளை ஸ்கேன் செய்து வருகிறார்கள் என்று டெல்லி போலீசார் நேற்று தெரிவித்தனர்.

“அவர் பாதுகாப்பு தொடர்பான சில வகைப்படுத்தப்பட்ட ஆவணங்களை வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது” என்றும் பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களை அவர் எவ்வாறு வாங்கினார் என்பதையும், அதிகமான நபர்களின் ஈடுபாடு இருக்கிறதா..? என்பதையும் அவரிடம் விசாரிப்பதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்