தல தோனிக்கு வயதாகிவிட்டது என்று நினைக்க வேண்டாம்….. இர்பான் பதான்..!
13 வது சீசன் ஐபிஎல் தொடர் இன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் இரவு 7. 30 மணிக்கு தொடங்குகிறது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மூன்று முறை கோப்பையை கைப்பற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் நான்கு முறை கோப்பையை கைப்பற்றிய மும்பை இந்தியனஸ் அணியும் மோதவுள்ளது. இந்நிலையில் இதற்கு அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்து உள்ளார்கள் என்று கூறலாம்.
இந்த நிலையில் ஒருவருடம் கிரிக்கெட் விளையாடாத தோனியின் ஆட்டத்தை காண அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளார்கள், மேலும் தபொழுது தோனி குறித்து, முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றி சில விஷியங்களை கூறியுள்ளார்.
அதில் பேசிய இர்பான் பதான் பந்துவீச்சாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை ஒன்றை கூறியுள்ளார். அனைத்து பந்துவீச்சாளர்களும் தயவுசெய்து கவனிக்கவும் கேப்டன் தோனிக்கு எதிராக நின்று பந்துவீசும்பொழுது கவனமாக இருங்கள். மேலும் அவர் இந்தியாவின் கேப்டனாக வருவதற்கு முன்பு பார்த்த தோனியை நாம் காணலாம். தோனி சுதந்திரமாக விளையாட அதிக வாய்ப்பு உள்ளது.
மேலும் அனைத்து பந்து வீச்சாளர்களும் தோனியை எதிர்த்து நிற்பது மிகவும் கடினம் அவருக்கு வயதாகிவிட்டது என்றும் எந்த பந்துவீச்சாளரும் நினைக்கவேண்டாம். இவ்வளவு காலமாக கிரிக்கெட் விளையாட வில்லை என நினைக்க வேண்டாம் பந்துவீச்சாளர்களில் தோனி சுதந்திரமாக விளையாடுவதை நாம் இந்த ஐபிஎல் தொடரில் காணலாம் என்றும் கூறியுள்ளார்.