தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.!
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோயம்புத்தூர், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, ராணிப்பேட்டை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதியில் லேசான முதல் மிதமான மழைக்கு வைப்பு என்றும் சென்னை வானிலையை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.