அதிமுக கூட்டத்தில் காரசார விவாதம் நடைபெறவில்லை – அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுகவில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. காரசார விவாதம் நடைபெறவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள கட்சிகள் தயாராகி வருகின்றது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டும், கட்சி பொறுப்புகள் குறித்த அறிவிப்பும் அறிவித்து வருகின்றன. நேற்று அதிமுக தலைமையகத்தில் முதலவர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் உயர்மட்ட குழு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமை நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், அதிமுகவில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. காரசார விவாதம் நடைபெறவில்லை என்று தெரிவித்துள்ளார். கட்சி நிர்வாகிகள் ஒற்றுமையாக இருந்து, வரும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும். அதிமுக கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. சசிகலா பற்றி நேற்றைய கூட்டத்தில் பேசவில்லை. முதலமைச்சர் வேட்பாளர் குறித்து பேச வேண்டாம் என தலைமை ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது என்றும் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025