#BREAKING:செப்டம்பர் 28-ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் என அறிவிப்பு.!
இன்று சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உயர்மட்ட குழு ஆலோசனை நடைபெற்றது.
இந்நிலையில், அதிமுக செயற்குழுக் கூட்டம் வருகின்ற 28-ம் தேதி திங்கள்கிழமை காலை 09.45 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை செயலகத்தில் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும் எனவும், கழக உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும்.
உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து கழக செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என முதல்வர், துணை முதல்வர் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.