கேரளாவில் ஒரே நாளில் 4,167 பேருக்கு கொரோனா, 2,744 பேர் டிஸ்சார்ஜ்.!
கேரளாவில் ஒரே நாளில் 4,167 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் இரண்டாவது நாளாக 4 ஆயிரத்திற்கும் மேல் கொரோனாதொற்று பதிவாகியுள்ளது. அந்த வகையில், இன்று ஒரே நாளில் 4,167 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. மேலும், இன்று 12 பேர் சிகிச்சைபலனின்றி உயிரிழந்ததால் இதுவரை கொரோனாவால் 501 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில், 35,724 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனாவிலிருந்து இன்று 2,744 பேர் குணமடைந்தனர். இதுவரை 90,089 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளார்கள் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.