கிசான் முறைகேடு : பொதுமக்கள் புகார் அளிக்கலாம் – சிபிசிஐடி

Default Image

பிரதமரின் கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக புகார் அளிக்க தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை சிபிசிஐடி போலீசார் வெளியிட்டுள்ளது.  

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு சார்பில் பிரதமர் கிசான் திட்டம் மூலம் ஆண்டுக்கு ரூ.6000 வழங்கப்படும் என 2018-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.அதன்படி விவசாயிகள் வருவாய்த் துறையிடம் தங்கள் நிலத்திற்கான பட்டா சிட்டா சான்றிதழ் வாங்கிக்கொண்டு வேளாண்மை துறை அலுவலகத்தில் விண்ணப்பித்து இந்த உதவித்தொகையை பெற்று வந்தனர். பின்னர் குறைந்த அளவே விவசாயிகள் பயன் பெறுவதால் அதிகளவு விவசாயிகள் பயன்பெறும் வகையில் விவசாயிகளே தானாக முன்வந்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இதனிடையே இந்த திட்டத்தில் தமிழகத்தில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் முறைகேடு அதிக அளவில் நடைபெற்று இருப்பதாக புகார் எழுந்தது.இதனால் பல மாவட்டங்களில் பிரதமர் கிசான் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் பிரதமரின் கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக புகார் அளிக்க தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை சிபிசிஐடி போலீசார் வெளியிட்டுள்ளனர். கிசான் முறைகேடு பற்றிய தகவல்களை அளிக்க புகார் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தொலைபேசி எண்: 044-2851 3500 .,வாட்சப் எண்: 9498181035.

கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக தங்களுக்கு தெரிந்த தகவல்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்று  சிபிசிஐடி தெரிவித்துள்ளது. பொதுமக்கள் அளிக்கும் தகவல்கள், புகார்களில் உள்ள விவரங்கள் ரகசியம் காக்கப்படும் சரியான தகவல் அளிக்கும் பொதுமக்களுக்கு வெகுமதிகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்