பிளே ஸ்டோரில் Paytm நீக்க இதுதான் காரணமா..?

Default Image

சூதாட்டங்களை ஊக்குவிக்கும் ஆன்லைன் கேசினோக்கள் மற்றும் பிற சூதாட்ட செயலிகளை பிளே  ஸ்டோர் அனுமதிப்பதில்லை, ஒரு செயலி வாடிக்கையாளர்களை பணம் செலுத்தக்கூறி சூதாட்டத்தில் ஈடுபடுத்தி, பரிசுகளை வழங்கினால் அது கூகுள் பிளே  ஸ்டோர் கொள்கைகளுக்கு விரோதமானது.

அப்படி ஏதேனும் ஒரு செயலி கொள்கைகளை மீறினால் அந்த செயலியை ஒழுங்குமுறைக்கு வரும்வரை நீக்கப்படும்.  அதையும் மீறி ஒரு செயலி தொடர்ந்து விதிமுறை மீறலில் ஈடுபட்டால் கூகுள் நிரந்தரமாக நீக்கி விடும்.

இந்நிலையில், paytm ஆப் ஆன்லைன் விளையாட்டுகளிலும், ஆன்லைன் சூதாட்டங்களிலும் வாடிக்கையாளர்களை பங்குபெறச் செய்ததாக  குற்றம்சாட்டபட்ட நிலையில்,  கூகிளின் கொள்கைகளை மீறியதால், Paytm, பிளே  ஸ்டோரில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.

ஆனால், Paytm For Business, Paytm Money, Paytm Mall பிற செயலிகள் அனைத்தும் Play Store இல் இன்னும் உள்ளன. ஆனால், ஆப்பிள் ஆப் ஸ்டோரில் Paytm பதிவிறக்கம் செய்ய முடிகிறது. மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் இந்த செயலியை பயன்படுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்