வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாக தலைமை செயலாளர் சண்முகம் அதிகாரிகளுடன் ஆலோசனை..!
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வருகின்ற அக்டோபர் மாதத்தில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அதற்கு தயாராகும் விதமாக அனைத்து துறை அரசு செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
அந்தக் கூட்டத்தில் வட கிழக்கு பருவமழையின் போது அதிக மழைப்பெய்ய கூட இடங்களை கண்டறிந்து அதற்கு ஏற்ற வசதிகள் மற்றும் கூடுதல் கவனம் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் மழை, வெள்ளம் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்து தூர்வார வேண்டிய பணிகள் போன்றவை குறித்து தாழ்வான பகுதிகளை கண்டறிந்து அப்பகுதிகளில் மழைநீர் தேங்காமல் வெளியேறுவதற்காக பாதைகள் அமைக்கும் பணிகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டு உள்ளது.