நபியை பற்றி அவதூறு பேசியதால் 13 வயது சிறுவனுக்கு 10 ஆண்டுகள் சிறை – எதிர்க்கும் யுனிசெஃப்!

Default Image

நபியை பற்றி அவதூறு பேசியதால் 13 வயது சிறுவனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுக்கப்பட்டதை யுனிசெஃப் நிறுவனம் எதிர்த்துள்ளது.

வடமேற்கு நைஜீரியாவின் கனோ மாநிலத்தில் உள்ள ஷரியா நீதிமன்றத்தில் ஒமர் ஃபாரூக் எனும் 13 வயது சிறுவன் தனது நண்பனுடன் வாக்குவாதம் செய்த போது முகமது நபி அவர்களை அவதூறாக பேசியதால் குழந்தைகள் உரிமைகள் நிறுவனமாகிய யுனிசெஃப் நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் முகமது நபியை அவதூறாக பேசியதற்காக ஸ்டுடியோ உதவியாளர் யஹாயா ஷெரீப்-அமினுவுக்கு சமீபத்தில் அதே நீதிமன்றத்தில் மரண தண்டனை விதித்ததாகவும் வழக்கறிஞ்ஞர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு குறித்த விசாரணையின் போது சிறுவனின் வழக்கை குறித்து அறிந்ததாகவும் யுனிசெஃப் நிறுவனத்திடம் வழக்கறிஞ்ஞர் கூறியுள்ளார். மேலும், இது நைஜிரியாவின் அரசியலமைப்புக்கு முரண்பாடானது எனவும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்