மலிங்கா இடத்தை நிரப்புவது எளிதல்ல… ரோஹித் சர்மா..!
அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கும் 13 வது சீசன் ஐபிஎல் தொடர் நாளை இரவு 7.30க்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. இந்நிலையில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி மோதவுள்ளது. மேலும் முதல் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் கடினமாக பயிற்சி செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் மிகவும் முக்கியமான பந்துவீச்சாளர் லசித் மலிங்கா இந்த வருடம் ஐபிஎல் போட்டியில் தனது சொந்த காரணங்களால் விலகியுள்ளார், இந்த நிலையில் அவர் இடத்தை யார் நிரப்புவார் என்று அணைத்து ரசிகர்களுக்கும் இடையே கேள்வி எழும்பியுள்ளது.
மேலும் இந்த நிலையில் மலிங்கா போட்டியில் இல்லாததை பற்றி மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் சில கருத்துக்களை கூறியுள்ளார். அதில் ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியின் மேட்ச் வின்னர் மலிங்காவின் இடத்தை நிரப்புவது அவ்வளவு எளிதல்ல என்று நான் நினைக்கவில்லை.
மேலும் பதற்றமான சூழ்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியை அவர்தான் காப்பாற்றுவார், அவருடைய அனுபத்தை கண்டிப்பாக நாங்கள் இழக்கிறோம். மேலும் அவர் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் விளையாட வில்லை இதை நாங்கள் எங்கள் அணியின் ஒரு பகுதி இல்லை என்பது போல் இருக்கிறது.
எங்களுக்கு தவல் குல்கர்னி, ஜேம்ஸ் பாட்டின்சன், ஆகியோர் இருக்கிறார்கள். இவர்களை தான் நாங்கள் மலிங்காவிற்கு பதிலாக பார்க்கிறோம். ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மலிங்கா செய்த சாதனைகளை யாருடனும் ஒப்பிட முடியாது என்றும் கூறியுள்ளார்.