இந்திய இராணுவ தளபதி திடீர் பயணமாக வடக்கு காஷ்மீர் சென்றார்…

Default Image

ஜம்மு & காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அடிக்கடி  அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது. இது ஒருபக்கம் என்றால்  மறுபக்கம் லடாக்கில் சீனா வேறு குடைச்சல் கொடுத்து வருகிறது. இந்நிலையில், நேற்று திடீரென இந்திய ராணுவ தளபதி எம்.எம்.நரவனே 2 நாட்கள் பயணமாக நேற்று வடக்கு காஷ்மீர் சென்றார். எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடிய ராணுவ தளபதி எம்.எம்.நரவனே பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுத்ததற்காக ராணுவ வீரர்களை பாராட்டினார். எல்லையில் ஊடுருவலை தடுக்க இரவு, பகல் கண்காணிப்பை உறுதி செய்ய தொழில்நுட்பத்தை பயன்படுத்த அறிவுறுத்தினார். பின்னர் ஜம்மு காஷ்மீர் லெப்டின்ட் கவர்னர் மனோஜ் சின்ஹாவை சந்தித்து, மாநிலத்தின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்து விவாதித்தார். இந்த திடீர் பயணம் இராணுவ வட்டாரங்களில் ஒரு ஊக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்