விவசாயிகள் தொடர்பான 3 மசோதாக்கள் நிறைவேற்றம்.!

நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் பல மசோதாக்கள் நிறைவேற்றப் பட்டு வருகின்றன. இந்நிலையில், மத்திய அரசு தாக்கல் செய்த விவசாயிகள் தொடர்பான மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அத்தியாவசிய பொருட்கள் மசோதா 2020, விலைவாசி தொடர்பான விவசாயிகள் அதிகாரம் மற்றும் பாதுகாப்பு ஒப்பந்த மசோதா 2020 மற்றும் விவசாயிகள் உற்பத்தி வர்த்தகம் மசோதா 2020 ஆகிய 3 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. பா.ஜ.க. கூட்டணியில் உள்ள சிரோண்மணி அகாலிதளம் கட்சியும் இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, மத்திய அமைச்சராக இருந்த ஹர்சிம்ரத் கவுர் பாதல் தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.