“வுஹான் ஆய்வகத்தில் தான் உருவாக்கப்பட்டது” என கூறிய சீன மருத்துவரின் ட்விட்டர் கணக்கு முடக்கம்!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
கொரோனா வைரஸ் வுஹான் ஆய்வகத்தில் தான் உருவாக்கப்பட்டது என கூறிய டாக்டர் லி மெங் யானின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
சீனாவில் கடந்தாண்டு டிசம்பரில் பரவதொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல நாடுகள் தீவிரம் கட்டிவருகிறது.
இதன்காரணமாக வூஹானில் உள்ள ஆய்வகத்தில் இருந்து தான் கொரோனா வைரஸ் பரவிய உண்மைகளை சீனா மறைத்து விட்டதாகவும் அமெரிக்க ஊடகங்கள் கொரோனா பரவல் தொடங்கிய போதே குற்றம் சாட்டி வந்தனர். அதனை சீனா தொடர்ந்து மறுத்துக்கொண்டே வந்தது.
மேலும், கொரோனா வைரஸ் இயற்கையாக உருவானது இல்லையெனவும், வூஹான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான ஆதாரங்களும் தன்னிடம் இருப்பதாக சீன வைராலஜிஸ்ட் டாக்டர் லி மெங் யான், கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
மேலும், அவர் அமெரிக்காவில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இந்நிலையில், ட்விட்டர் விதிமுறைகளை டாக்டர் லி மெங் யான் மீறியுள்ளதாகவும், இதன்காரணமாக அவரின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வெல்லப் போவது யார்? சற்று நேரத்தில் ஈரோடு இடைத்தேர்தல் மற்றும் டெல்லி சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை.!
February 8, 2025![ByeElection](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/ByeElection.webp)
INDvENG: களமிறங்கும் ‘கிங்’ விராட் கோலி! தொடரை கைப்பற்றுமா இந்தியா?
February 7, 2025![ind vs eng 2 odi](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/ind-vs-eng-2-odi-.webp)