அறிவாசான் தந்தை பெரியாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் – கனிமொழி ட்வீட்

Default Image

அறிவாசான் தந்தை பெரியாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என கனிமொழி ட்வீட் செய்துள்ளார்.

பெரியார் என அனைவராலும் அழைக்கப்படுபவர் ஈ.வெ. ராமசாமி அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் சமூக சீர்திருத்தம், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவது, சாதி வேற்றுமைகளை அகற்றுவது உள்ளிட்டவற்றிக்காக போராடிய மிகப்பெரிய பகுத்தறிவாளர் ஆவார்.

இன்று இவரது, 142 பிறந்த நாள் தினம் கொண்டாடபடுகிறது. இவரது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், திமுக எம்.பி கனிமொழி தனது டிவிட்டர் பக்கத்தில் இது குறித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், சமூகத்தின் பாலின,சாதீய,வர்க்க பேதம் என சுயமரியாதைக்கு எதிரான அனைத்து பேதங்களையும் தொடர்ந்து எதிர்த்தவர்.பெண் விடுதலைக்கு எதிரான அனைத்து விழுமியங்களையும் கேள்விக்குள்ளாக்கி தயக்கம் இல்லாமல் குரல் கொடுத்த முன்னோடி.அறிவாசான் தந்தை பெரியாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்