“பிக்பாஸ் போல கொரோனாவுக்கு பயந்து 100 நாட்கள் வீட்டிற்குள் இருந்தார் கமல்!”- அமைச்சர் ஜெயக்குமார்
கமலஹாசன், “பிக் பாஸ்” போல, கொரோனாவுக்கு பயந்து 100 நாட்களாக வீட்டிற்குள் இருந்தபடி அரசை விமர்சனம் செய்து வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ராமசாமி படையாட்சியாரின் 103 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை, கிண்டியில் உள்ள அவரின் சிலைக்கு அருகே உள்ள அவரின் திருவுருவப்படத்திற்கு ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். அதன்பின் செய்தியாளர்களை அமைச்சர் ஜெயக்குமார் சந்தித்தார்.
அப்போது செய்தியாளர் ஒருவர், கொரோனாவிலிருந்து மக்களைக் காப்பாற்ற தமிழக அரசு தவறிவிட்டது கமல்ஹாசன் விமர்சித்தது குறித்து கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், தமிழகத்தில் கொரோனா பரவ தொடங்கி 150 நாட்களாகி விட்டதாக தெரிவித்தார்.
மேலும், பிக் பாஸ் வீட்டில் 100 நாட்கள் இருந்து வெளியே வருபவர்களுக்கு பரிசாக பணம் வழங்கப்படுமென தெரிவித்த அவர், 150 நாட்களுக்கு மேலாக தங்களின் உயிரை பனையம்வைத்து கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுவருவதாகவும், கமலஹாசன் வீட்டைவிட்டு வெளியே வந்தாரா? எனவும், அவர் “பிக் பாஸ்” போல, கொரோனாவுக்கு பயந்து 100 நாட்களாக வீட்டிற்குள் இருந்தபடி அரசை விமர்சனம் செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.