கொடைக்கானலுக்கு இ-பாஸ் இல்லாமல் வரலாம் -உதவி ஆட்சியர்!

Default Image

கொடைக்கானலுக்கு வர விரும்பும் சுற்றுலாப்பயணிகள் இ-பாஸ் இல்லாமல் வரலாம் என உதவி ஆட்சியர் சிவகுரு அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகம் முழுவதிலும் அதிகரித்து வந்தாலும் தமிழக அரசு மக்களின் நிலை கருதி சில தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் போக்குவரத்து கடந்த மாதமே இயக்கப்பட்டது, ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு செல்வதற்கு இ பாஸ் அனுமதி பெற வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.  தமிழகத்தின் சுற்றுலாத் தலங்களை தவிர மற்ற இடங்களுக்கு இ பாஸ் இல்லாமல் பயணிக்கலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

இதனை அடுத்து ஊட்டி, ஏற்காடு, கொடைக்கானல் ஆகிய சுற்றுலா தலங்களுக்கு இ பாஸ் பெற்று பயணித்து வந்த பயணிகள் இனி இ-பாஸ் பெற்று வரவேண்டும் என்று அவசியமில்லை என உதவி ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் இன்னும் சில தினங்களில் மற்ற சுற்றுலா தளங்களும் படிப்படியாக திறக்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்