நியாய விலை கடை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை – தமிழக அரசு அரசாணை வெளியீடு.!
நியாய விலைக்கடையில் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பொது விநியோகத் திட்ட நியாய விலை கடைகள் மூலம் அரசின் சிறப்பு திட்டத்தை செயல்படுத்தும்போது, நியாய விலை கடை விற்பனையாளர்களுக்கு ஏற்படும் கூடுதல் பணிச்சுமையை ஈடுசெய்ய ஒரு குடும்ப அட்டைக்கு 0.50 பைசா வீதம் வழங்க ஆணையிட்டுள்ளது.
பொது மக்களை பாதுகாக்கும் வகையில் நியாய விலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு குடும்ப உறுப்பினருக்கு சென்னையை தவிர, மற்ற நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு (69,09,385) குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒருவருக்கு தலா 2 மாஸ்குகள் வீதம் அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
சிறப்பு ஊக்கத்தொகையாக ஒரு குடும்ப அட்டைக்கு 50 பைசா வீதம் ரூ.34,54,692 லட்சம் சிறப்பு ஊக்கத்தொகையினை தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய நிதியில் இருந்து வழங்க பரிந்துரை செய்து உரிய அரசாணை வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
நியாய விலை கடை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை – தமிழக அரசு அரசாணை வெளியீடு.!#Rationshop #TNGovt #Governmentorder pic.twitter.com/beal74Yebm
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) September 16, 2020