நீட் தேர்விற்கு எதிராக சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம்.!

இந்தியாவில், சில மாநிலங்களில் நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதிலும், குறிப்பாக தமிழகத்தில் தான் நீட் தேர்விவிற்கு கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. தமிழகத்தில் பல அரசியல் கட்சிகள் நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் இதுவரை நீட் தேர்வால் 13 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். கடந்த 10 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். அதிலும், நீட் தேர்விற்கு முந்தைய நாளில் மட்டும் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
இந்நிலையில், இன்று சென்னை ஆலப்பாக்கத்தில் நீட் தேர்விற்கு எதிராக நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தி நடத்தினர். இந்த போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் மன்சூரலிகான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.