18 வயதுக்குட்பட்ட பெண்களை பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்தினால் ஆயுள் தண்டனை தர பரிந்துரை – முதல்வர்
பாலியல் தொழிலுக்காக பெண்களை விற்பது, வாங்குவது தொடர்பான குற்றத்திற்கு அதிகபட்ச ஆயுள் தண்டனை வழங்குவதற்கு மத்திய அரசிடம் பரிந்துரை செய்யப்படும்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நேற்று முன்தினம் தொடங்கி, மூன்றாவது நாளான இன்று நடைபெற்று வருகிறது. அப்போது, 110-விதியின் கீழ் தமிழக முதல்வர் பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், பிரிவு 352Dல் தவறான குற்ற நோக்கத்துடன் பெண்களை பின்தொடர்ந்து, அதனை இரண்டாவது முறையும் தொடர்ந்து குற்றம் செய்தால், தற்போது வழங்கப்படும் 5 ஆண்டு சிறை தண்டனையை 7 ஆண்டுகளாக உயர்த்தப்படும் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து, பிரிவு 372ல் பாலியல் தொழிலுக்காக 18 வயதுக்குட்பட்ட நபர்களை விற்பனை செய்தல் மற்றும் பிரிவு 373ல் பாலியல் தொழிலுக்காக 18 வயதுக்குட்பட்ட நபர்களை விலைக்கு வாங்குதல் ஈடுபட்டால், தற்போது வழங்கப்படும் அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு பதிலாக, குறைந்தபட்சம் 7 ஆண்டு சிறை தண்டனையும், அதிகபட்ச ஆயுள் தண்டனையும் வழங்குவதற்கு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், அம்மாவின் அரசு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எப்போதும் அரணாக இருந்து அவர்களை காக்கும் என்று உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
வரதட்சணை கொடுமை வழக்கில் அதிகபட்ச தண்டனை 7 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்த பரிந்துரை செய்யப்படும் – முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு#TNAssembly | #EdappadiPalaniswami pic.twitter.com/R2pjoaLvos
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) September 16, 2020