இறுதி பருவத் தேர்வுகளை நடத்திக்கொள்ள அனுமதியளித்து அரசாணை வெளியீடு – தமிழக அரசு
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் இறுதி பருவத் தேர்வுகளை நடத்திக்கொள்ள அனுமதியளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் முறையில் தேர்வு நடத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 13 பல்கலைக்கழகங்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்த உயர்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது. ஒரு பல்கலைக்கழகத்தை தவிர 12 பல்கலைக்கழகங்கள் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகளை நடத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
பல்கலைக்கழக தேர்வு தேதிகள்:
சென்னை பல்கலைக்கழகம் தேர்வுகள் – செப்.21 முதல் 25 வரை நடைபெறும். அண்ணா பல்கலைக்கழகம் தேர்வுகள் – செப். 22 முதல் 29 வரை, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் தேர்வுகள் – செப்.17 முதல் 30 வரை, பாரதியார் பல்கலைக்கழகம் தேர்வுகள் – செப். 21 முதல் அக்.7 வரை, பாரதிதாசன் பல்கலைக்கழகம் தேர்வுகள் – செப். 21 முதல் 25 வரை நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் இறுதி பருவத் தேர்வுகளை நடத்திக்கொள்ள அனுமதியளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. #TNgovernment #finalsemester #universities pic.twitter.com/rDMBBJJALs
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) September 15, 2020