சாலை பாதுகாப்பு விதிகளை புதிய போஸ்ட் மூலமாக வெளியிட்டுள்ள புனே போக்குவரத்துக்கு காவல்துறை!

Default Image

சாலை பாதுகாப்பு விதிகளை பற்றிய புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ள புனே போக்குவரத்துக்கு காவல்துறை.

இளைஞர்கள் மற்றும் சில சாலை விதிகளை மதிக்காதவர்களுக்காக  போக்குவரத்துக்கு காவல்துறையினர் தங்களது நேரத்தை செலவழித்து பாதுகாப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அவர்களை மதிக்காமல் பலர் தங்களது போக்கில் செல்வதும் உண்டு, இதனால் ஆபத்தை சந்திப்பதும் அவர்கள் தான். புனேயில் உள்ள சாலை பாதுகாப்பு காவல்துறையினர் சாலை பாதுகாப்பு விதிகள் குறித்த செய்தி ஒன்றை கடந்த செவ்வாய்க்கிழமை டுவிட்டரில் புகைப்படமாக பதிவு செய்துள்ளனர். அதில் மூன்று வேகமானி புகைப்படங்களை பதிவிட்டு அதற்கு அர்த்தங்களை எழுதி உள்ளனர். அதாவது சாதாரணமாக 50 வேகத்தில் செல்லக் கூடியவர்கள் மெதுவான வேகத்தில் வாகனம் ஓட்டுவதை காட்டுகிறது என்பதை குறிக்க நம்பிக்கை எனும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது உள்ளவர்கள் மிதமான வேகத்தில் வாகனம் ஓட்டுவது எதார்த்தமானவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம் அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுபவர்களை முட்டாள் எனும் சொல்லால் குறிப்பிட்டு அந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பதிவுடன் அவசரம் இழப்பில் தான் முடியும், வேகமணியை வெல்ல வேண்டும் என்ற அவசரம் வேண்டாம் என புனே காவல்துறையினர் தங்களது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளனர். இதோ அந்த பதிவு,

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்