அவசர காலங்களில் பயன்படுத்தலாம் – கொரோனா தடுப்பூசிக்கு யூஏஇ ஒப்புதல்
கொரோனா தடுப்பூசி நல்ல பலன் அளிப்பதால் அவசர காலங்களில் பயன்படுத்தலாம் என ஒப்புதல் அளித்துள்ளது யுஏ இ.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் உலகம் முழுவதிலும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் சுகாதார அமைச்சகம் தங்களது கொரோனா தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு அவசரகால ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது கொரோனா பாதிப்புக்குள்ளாகி அதிக ஆபத்தில் இருக்கக்கூடிய சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கலாம் என ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய சுகாதாரம் மற்றும் தடுப்பு அமைச்சர் அப்துல் ரகுமான், தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாவது பரிசோதனைகள் பாதுகாப்பான முடிவுகளை தந்துள்ளது. மேலும் இது சிறப்பானதாகவும் நல்ல விளைவுகளை கொடுப்பதாகவும் உள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து கூறிய தேசிய மருத்துவ குழுவின் தலைவரும் மூன்றாம் கட்டப் மருத்துவ பரிசோதனைகளின் முதன்மை புலனாய்வாளர்கள் நவால் அல் காபி என்பவர், தடுப்பூசி பரிசோதனைகள் மருத்துவ பரிசோதனையில் சரியான பாதையில் நகர்கின்றன. இதுவரை நடத்தப்பட்ட அனைத்து சோதனைகளும் வெற்றிகரமாக உள்ளது, 31 ஆயிரம் தன்னார்வலர்கள் மருத்துவ பரிசோதனையில் பங்கேற்றுள்ளனர். இவர்களுக்கு லேசான பக்க விளைவுகள் அதாவது பிற தடுப்பு ஊசிகள் போடப்படும் போது ஏற்படக் கூடிய பக்க விளைவுகள் மட்டுமே ஒரு சிலருக்கு ஏற்பட்டுள்ளது. கடுமையான பக்கவிளைவுகள் எதுவும் தன்னார்வலர்களுக்கு ஏற்படவில்லை என கூறியுள்ளார்.