பீகாரில் எய்ம்ஸ் மருத்துவமனை.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!
இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் பீகாரின் தர்பங்காவில் புதிய அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) நிறுவ ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த புதிய எய்ம்ஸ் மருத்துவமனையை நிறுவுவதற்கு ரூ .1264 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை ஒப்புதல் தேதியிலிருந்து நான்கு ஆண்டுகளுக்குள் நிறைவடையும் என கூறப்பட்டுள்ளது.
பிரதமரின் “ஸ்வஸ்த்யா சுரக்ஷா” திட்டத்தின் கீழ் இந்த புதிய எய்ம்ஸ் மருத்துவமனை நிறுவப்படவுள்ளது. இந்த எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ.2,37,500 மாத சம்பளத்தில் இயக்குனர் பதவியை உருவாக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
புதிய எய்ம்ஸ் அமைப்பது மூலம் கிட்டத்தட்ட 3000 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாகும் எனவும், புதிய எய்ம்ஸ் அருகே வரும் ஷாப்பிங் சென்டர், கேன்டீன்கள் போன்ற வசதிகள் மற்றும் சேவைகள் காரணமாக மறைமுக வேலைவாய்ப்பு உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.