ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ராஜினாமா – யோஷிஹைட் சுகா வாக்கு முறையில் தேர்வு!
ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ராஜினாமா செய்வதாக அறிவித்ததை அடுத்து யோஷிஹைட் சுகா வாக்கு முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த ஜப்பான் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் பிரதமர் ஷின்சோ அபே. இவர் தனக்கு உடல்நலக்குறைவு இருப்பதாகவும், தனது பதவியை ராஜினாமா செய்து கொள்வதாகவும் கடந்த மாதம் அறிவித்திருந்தார். இவரது ராஜினாமா அறிவிப்பை அடுத்து, சபையிலுள்ள 534 உறுப்பினர்களும் வாக்கு அளிக்குமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.
534 உறுப்பினர்களில் 377 பேர் யோஷிஹைட் சுகா என்பவருக்கு வாக்களித்துள்ளனர். பெரும்பான்மையாக இவரது பெயர் வாக்களிக்கப் பட்டுள்ளதால் இவர் அடுத்த பிரதமராக பொறுப்பேற்க உள்ளார் என கூறப்பட்டுள்ளது. விவசாய குடும்பத்தில் பிறந்து பள்ளிப்படிப்பை முடித்து அட்டை பெட்டி தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த வருமானத்தை வைத்து கல்லூரியில் சேர்ந்து படித்தவர் தான் சுகா.
இவர் பிரதமர் சின்சோ அவர்களுக்கு கீழ்நிலை தொண்டராக இருந்து பணியாற்றியதுடன் நெருக்கமான உதவியாளராக இருந்துள்ளார். இந்நிலையில் வருகின்ற புதன் கிழமை ஷின்சோ அபே அவர்கள் ராஜினாமா செய்யவுள்ள நிலையில், சுகா அவர்கள் பிரதமராக பொறுப்பேற்க உள்ளார் என கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகா அவர்கள் கூறுகையில், பிரதமர் ஷின்சோ அபேயின் கொள்கைகளை அப்படியே பின்பற்ற போவதாக கூறியுள்ளார்.