தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
ஆந்திர கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அதே இடத்தில் நீடிக்கிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், நாமக்கல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதியில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.