டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு கொரோனா உறுதி.!

Default Image

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி இருந்த நிலையில், பரிசோதனை செய்த போது தொற்று இருப்பது உறுதியானது.

டெல்லி துணை முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவருமான மணீஷ் சிசோடியாவுக்கு லேசான காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி இருந்த நிலையில், பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று உறுதியானது. இதனால் என்னை நானே தனிமைப்படுத்தியுள்ளேன். தற்போது காய்ச்சலோ வேறு பிரச்னையோ இல்லை. நான் நலமுடன் உள்ளேன். விரைவில் உங்கள் ஆசிர்வாதங்களுடன் பணிக்குத் திரும்புவேன் என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்