கோலியை போன்று கேப்டன் கிடைத்தால் அனைத்து விஷயங்களையும் எளிதாக செய்யலாம்.. ஏபி டிவிலியர்ஸ்
இந்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டி வருகின்ற 19 ஆம் தேதி சனிக்கிழமை இரவு 7.30க்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மேலும் ஐபிஎல் போட்டிகனான அட்டவணையையும் அண்மையில் வெளியானது.
இந்நிலையில் மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகாக அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளார்கள் என்றே கூறலாம், முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த இரண்டு அணியும் மோதவுள்ளது.
இந்த நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கிரிக்கெட் வீரர் ஏபி டிவிலியர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி குறித்து புகழ்ந்துகூறியுள்ளார் அதில் ஏபி டிவிலியர்ஸ் கூறியது விராட் கோலி முன்னிருந்த அணியை வழிநடத்துவதாக கூறியுள்ளார்.
மேலும் விராட் கோலியிடம் இருந்து இளம் கிரிக்கெட் வீரர்கள் சில வற்றை கற்றுகொள்ளலாம் மேலும் விராட்கோலியை போல் ஒரு கேப்டன் கிடைத்தால் எந்த ஒரு விஷியத்தையும் மிகவும் சிறப்பாக சுலபமாக செய்யலாம் என்றும் கூறியுள்ளார்.