இந்தியாவின் பன்முகத்தன்மையையும் ஒற்றுமையையும் கெடுப்பதாகத்தான் இந்தி இருக்கிறது – மு.க. ஸ்டாலின்
இந்தியாவின் பன்முகத்தன்மையையும் ஒற்றுமையையும் கெடுப்பதாகத்தான் இந்தி இருக்கிறது என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1949-ஆம் ஆண்டு செப்டம்பர் 14-ஆம் தேதி, இந்தி மொழி, அலுவல் மொழியாக அந்தஸ்து பெற்றது.இதன் விளைவாக ஆண்டுதோறும் செப்டம்பர் 14-ஆம் தேதி இந்தி தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில்,இந்திய கலாச்சாரத்தின் உடைக்க முடியாத அடையாளம் இந்தி. நம் நாட்டில் சுதந்திர போராட்டத்திற்கான புரட்சி ஏற்பட்ட காலத்திலிருந்தே ஒட்டுமொத்த மக்களையும் ஓரணியில் ஒன்றாக திரட்ட இந்தி சக்தி வாய்ந்ததாக பயன்பட்டு வருகிறது. இந்தி மற்றும் பிற இந்திய மொழிகளின் சமமான வளர்ச்சியை மனதில் கொண்டே புதிய கல்விக்கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், மொழி மற்றும் புவியியல் எல்லைக்கோட்டினால் தான் ஒரு நாடு அடையாளம் காணப்படுகிறது. வேற்றுமையில் ஒற்றுமை கண்ட இந்தியாவில் அதன் மொழிகள் தான் பலம். அது நம் ஒற்றுமையில் ஒரு அடையாளம் ஆகும். மொழி, கலாச்சாரம் என இந்திய நாடு வேறுபட்டிருந்தாலும் ஒட்டுமொத்த தேசத்தையும் ஒன்றிணைகின்ற மொழியாக இந்தி மொழி இருக்கிறது என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், இந்தி இந்நாட்டை ஒருங்கிணைக்கிறது என்கிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்தியாவின் பன்முகத்தன்மையையும் ஒற்றுமையையும் கெடுப்பதாகத்தான் இந்தி இருக்கிறது.இந்தியைக் காப்பாற்றுவதை விட கொரோனாலிருந்து மக்களைக் காப்பாற்றுவதில் அமித்ஷா கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் முழு மருத்துவ பரிசோதனைக்காக மீண்டும் அமைச்சர் அமித்ஷா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தி இந்நாட்டை ஒருங்கிணைக்கிறது என்கிறார் உள்துறை அமைச்சர் @AmitShah
இந்தியாவின் பன்முகத்தன்மையையும் ஒற்றுமையையும் கெடுப்பதாகத்தான் இந்தி இருக்கிறது!
இந்தியைக் காப்பாற்றுவதை விட #Covid19-லிருந்து மக்களைக் காப்பாற்றுவதில் அமித்ஷா கவனம் செலுத்த வேண்டும்!#StopHindiImposition https://t.co/mCPmfzcl7C
— M.K.Stalin (@mkstalin) September 14, 2020