2-வது நாளாக இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர்
இன்று மீண்டும் கூடுகிறது தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர்.
3 நாள்களுக்கு சட்டப்பேரவைக் கூட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.அதன்படி நேற்று தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கியது. சட்டமன்ற உறுப்பினர்கள் முகக்கவசம் அணிந்து கூட்டத் தொடரில் பங்கேற்றனர்.அப்பொழுது மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சட்டப் பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.
பிரணாப் முகர்ஜி, இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, சட்டமன்றப் பேரவை உறுப்பினர் ஜெ. அன்பழகன் ,நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் மற்றும் சட்டமன்றப் பேரவை முன்னாள் உறுப்பினர் அவர்கள் மறைவு குறித்து இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. இறுதியாக மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் சட்டப் பேரவை இன்று ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில் இன்று அரசினர் அலுவல்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.