17 எம்.பி.க்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி

Default Image

17 எம்.பி.க்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக தள்ளிவைக்கப்பட்டது.மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் அக்டோபர் 1-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இன்று காலை 9 மணிக்கு தொடங்கப்பட்ட மழைக்கால கூட்டத்தொடரில் ஆளும் கட்சி, எதிர் கட்சி தலைவர்கள் மற்றும் எம்.பிக்கள் என அனைவரும் முகக்கவசம் அணிந்துகொண்டு பங்கேற்றனர்.

இதனிடையே  நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரையொட்டி நடத்தப்பட்ட பரிசோதனையில் 17 எம்.பி.க்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .மீனாட்சி லேக்கி, ஆனந்த் குமார் ஹெக்டே, பர்வேஷ் ஷாஹிப் சிங் உள்ளிட்ட 17 எம்.பி.க்களுக்கு  கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக எம்.பி . செல்வத்திற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்