“ஒருத்தர் படிச்சா வீடு மாறும்.. ஒவ்வொருத்தரும் படிச்சா இந்த நாடே மாறும்!”- நடிகர் சூர்யா
ஒருத்தர் படிச்சா வீடு மாறும், ஒவ்வொருத்தரும் படிச்சா இந்த நாடே மாறும் என நடிகர் சூர்யா, தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யா தனது அகரம் பவுண்டேஷன் மூலமாக, கல்வி பயில்பவர்களுக்கு ரூ.2.5 கோடி கல்வி ஊக்கத் தொகையாக வழங்க முடிவு செய்துள்ளதாகவும், பொருளாதார தேவையுள்ள குடும்பத்திலிருந்து ஒரு மாணவர்களுக்கு கல்வி கட்டணமாக அதிகபட்சம் பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்து, அதற்கான விண்ணப்ப படிவங்களையும் வெளியிட்டார்.
இந்தநிலையில் நடிகர் சூர்யா, தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு விடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர், ஒருத்தர் படிச்சா வீடு மாறும், ஒவ்வொருத்தரும் படிச்சா இந்த நாடே மாறும் என தெரிவித்த அவர், பொருளாதார நெருக்கடியில் நிறைய மாணவர்கள் தங்கள் கல்வியை பாதியில் கைவிட்டுள்ளதாகவும், நம்ம நினைச்சா அதை மாத்திடலாம் எனவும், ஒன்றிணைவோம், மாணவர்களோடு துணை நிற்போம் என கருத்து தெரிவித்துள்ளார்.
ஒன்றிணைவோம்… மாணவர்களோடு துணை நிற்போம்…#AgaramCovidEduFund pic.twitter.com/ZTIZN5rQCA
— Suriya Sivakumar (@Suriya_offl) September 14, 2020
மேலும் அந்த வீடியோவில் கல்வித் தொகைக்காக வெல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவர்கள் விண்ணப்பத்ததை காட்டினார். நடிகர் சூர்யா, நீட் தேர்வு அச்சத்தால் மூன்று மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்து கொண்டிருக்கின்றன.