அதிமுக அரசின் நீட் எதிர்ப்பு வெறும் நாடகம் – மு.க. ஸ்டாலின்
அதிமுக அரசின் நீட் எதிர்ப்பு வெறும் நாடகம் என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், நீட் தேர்வினால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் பெயர்களையும் சட்டமன்றத்தின் இரங்கல் தீர்மானத்தில் சேர்க்க வேண்டும் என்ற எனது கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
நீட், அதனால் மாணவர்கள் தற்கொலை; புதிய கல்விக் கொள்கை; சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை – இவை குறித்தெல்லாம் சபையில் பேசி விளக்கம் பெற வேண்டும் என்று கவன ஈர்ப்புத் தீர்மானங்களாக எழுதி கொடுத்து இருக்கிறோம்.நீட் தேர்வு குறித்து அதிமுகவின் தேர்தல் அறிக்கையிலும் சொன்னார்கள். கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்திலும் தீர்மானம் இயற்றினார்கள். சட்டமன்றத்திலும்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதெல்லாம் ஒரு நாடகம்.மக்களை ஏமாற்றுவதற்கான நாடகம்.
முதலமைச்சர், அமைச்சர்கள் டெல்லியில் பிரதமரையோ, சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் சந்தித்து வலியுறுத்தவில்லை . மத்தியில் இருக்கும் ஆட்சிக்கு அடிமை ஆட்சியாகத்தான் இந்த ஆட்சி இருந்து கொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
#NEET, #EIA, #COVID19 பற்றி பேரவையில் விவாதிக்க வேண்டும் என கோரியிருக்கிறோம்.
அதிமுக அரசின் #NEET எதிர்ப்பு வெறும் நாடகம்! அமைச்சர்களோ, முதலமைச்சரோ பிரதமரை இதுவரை நேரில் சந்தித்து உரிய அழுத்தம் தரவில்லை!@CMOTamilNadu தலைமையிலான அரசு மத்திய பாஜக அரசின் அடிமை அரசாகவே இருக்கிறது! pic.twitter.com/y41fDHWjSN
— M.K.Stalin (@mkstalin) September 14, 2020