நீட் தேர்வு அச்சதால் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு ஒ.பன்னீர்செல்வம் இரங்கல்.!
‘நீட் வேண்டாம் என்பதே தமிழகஅரசின் நிலைப்பாடு’ என நீட் தேர்வு அச்சதால் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு ஒ.பன்னீர் செல்வம் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் உள்ள 3,842 தேர்வு மையங்களில் சுமார் 15.97 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதி வருகிறனர். அந்த வகையில், தமிழகத்தில் சென்னை உள்பட 14 இடங்களில் 238 மையங்களில் 1.17 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.
இந்நிலையில், இந்த நீட் தேர்வு அச்சம் காரணமாக நேற்று ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது அனைவருக்கும் அதிர்ச்சியையும், சோகத்தையும் அளித்துள்ளது. தற்போது, நீட் தேர்வு அச்சம் காரணமாக உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு துணைமுதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், “தருமபுரி மாணவர் செல்வன். ஆதித்யா மற்றும் திருச்செங்கோடு மாணவர் செல்வன். மோதிலால் ஆகியோர் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டனர் என்ற துயரச் செய்திகள் எனது வேதனையையும் மன வலியையும் அதிகரிக்கின்றன. அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் நீட் வேண்டாம் என்பதே தமிழகஅரசின் நிலைப்பாடு.
மாணவர்களின் நலனில் அக்கறைகொண்ட மாண்புமிகு அம்மாவின் அரசு என்றும் மாணவர்களுக்கு உறுதுணையாக இருக்கும். மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேற ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. தயைகூர்ந்து தவறான விபரீத முடிவுகளை எடுக்க வேண்டாமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளர்.
தருமபுரி மாணவர் செல்வன்.ஆதித்யா மற்றும் திருச்செங்கோடு மாணவர் செல்வன்.மோதிலால் ஆகியோர் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டனர் என்ற துயரச் செய்திகள் எனது வேதனையையும் மன வலியையும் அதிகரிக்கின்றன. அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்!
— O Panneerselvam (@OfficeOfOPS) September 13, 2020