இந்தியா முழுவதும் நீட் தேர்வு தொடங்கியது.!
நாடு முழுவதும் நீட் நுழைவு தேர்வு தொடங்கியது. 3,842 மையங்களில் 15,97,433 மாணவர்கள் நீட் தேர்வை எழுதுகின்றனர்.
நாடு முழுவதும் உள்ள 3,842 தேர்வு மையங்களில் சுமார் 15.97 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகின்றனர்.அந்த வகையில், தமிழகத்தில் சென்னை உள்பட 14 இடங்களில் 238 மையங்களில் 1.17 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.
இந்தநிலையில், கொரோனா பரவலுக்கும் இடையே, திட்டமிட்டபடி நாடு முழுவதும் இன்று நீட் தேர்வுகள், மதியம் 2 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெறுகிறது. தமிழகத்தில் 14 நகரங்களில் நீட் தேர்வுகள் நடைபெறுகிறது. அதில், மொத்தம் 1,17,990 மாணவர்கள் தேர்வை எழுதுகின்றனர்.
தமிழகத்தில் பல நகரங்களில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 11 மணிக்கு மேல் மாணவர்கள் அனைவரும் பேட்ச் வரிசையாக தேர்வறைக்குள் அனுப்பப்பட்டனர்.
இதற்கிடையில், தேர்வு மையத்திற்குள் மாணவர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை நடத்தப்பட்டு, 2 மீட்டர் இடைவெளி விட்டு, வட்டம் போட்டு தேர்வர்களை நிறுத்தி அவர்களின் ஹால் டிக்கெட் உள்ளிட்ட பொருட்களை பரிசோதித்து, நீளமான கைகளை கொண்ட மெட்டல் டிடெக்டர் மூலம் பரிசோதனை நடத்தப்பட்டு, அதன்பின்னே தேர்வறைக்குள் அனுப்பப்பட்டு தேர்வை எழுதுகின்றனர்.