முன்னாள் மத்திய அமைச்சர் ரகுவன்ஷ் பிரசாத் சிங் காலமானார்.
ராஷ்டிரிய ஜனதா தளத்தில் முக்கிய ஒருவராக விளங்கி வந்தவர் ரகுவன்ஷ் பிரசாத் சிங். இவர் மத்திய அமைச்சராக மன்மோகன் சிங் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தார். சிலநாட்களுக்கு முன்பு ராஷ்டிரிய ஜனதா தளத்தில் விட்டு விலகுகிறேன் என்று அறிவித்து பீகார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்த நிலையில், வென்டிலேட்டரில் வைக்கப்பட்ட பின்னர் இன்று காலமானார். அவருக்கு வயது 74. ரகுவன்ஷ் பிரசாத்தின் மரணம் பீகார் அரசியல் வட்டாரத்தில் பெரும்சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ரகுவன்ஷ் பிரசாத் சிங் பீகாரின் வைஷாலி லோக்சபா தொகுதியிலிருந்து 5 முறை நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், கடந்த 2014, 2019 ஆகிய இரு தேர்தல்களிலும் அவர் தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் இறப்பிற்கு பல தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.