ஒரே நாடு ஒரே மொழி என சொல்லும் மத்திய அரசு ஏன் ஒரு ஜாதி என சொல்ல மறுக்கிறது – பொன்முடி
ஒரே நாடு ஒரே மொழி என சொல்லும் மத்திய அரசு ஏன் ஒரு ஜாதி என சொல்ல மறுக்கிறது என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி பேட்டியளித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக துணைப் பொதுச் செயலாளர் க.பொன்முடி, முதல்வர் பழனிசாமி, கொரோனாவாக இருந்தாலும் சரி, நீட் தேர்வாக இருந்தாலும் சரி, உளறல் பதிலையே அளித்து வருகிறார். ஒரே நாடு ஒரே மொழி என சொல்லும் மத்திய அரசு ஏன் ஒரு ஜாதி என சொல்ல மறுக்கிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். தனியார் கல்வி நிறுவனங்கள் கொள்ளையடிக்க தான் நீட் தேர்வு நடைபெறுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இன்று மதுரையில் நடந்த மாணவி தற்கொலை குறித்து கருத்து தெரிவித்த முதல்வர், நீட் தேர்வை ரத்து செய்ய முயற்சிப்போம் என்று கூறுகிறார். நாளை தேர்வை வைத்துக் கொண்டு இவர்கள் எப்படி ரத்து செய்வார்கள். வருகின்ற சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக நிச்சயம் குரல் கொடுப்போம். தமிழக பாடத்திட்டத்தில் இருந்து நீட் தேர்வு எழுதினால் தான் மாணவர்கள் தேர்ச்சி பெற முடியும். மருத்துவப் படிப்பு, பொறியியல் படிப்பில் கிராமப்புற மாணவர்கள் படிக்க வழிவகை செய்தவர் கலைஞர் என்றும் 2007 ல் நுழைவுத் தேர்வை ரத்து செய்தவர் அவரே எனவும் தெரிவித்துள்ளார்.