திமுக ஆட்சி அமையும்போது NEET தேர்வு ரத்து செய்யப்படும் – முக ஸ்டாலின்.!
திமுக ஆட்சி அமையும்போது நீட் தேர்வு ரத்து செய்யப்படும். வாய்ப்பை இழந்தவர்களுக்கு பொதுத்தேர்வு அடிப்படையில் மருத்துவம் படிக்க வாய்ப்பு உருவாக்கப்படும் – முக ஸ்டாலின்
நாடு முழுவதும் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் எழுந்த நிலையிலும், நாளை திட்டமிட்டபடி தேர்வு நடைபெறவுள்ளது. இதனால் மாணவர்கள் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, மதுரையில் காவல் சார்பு ஆய்வாளர் முருக சுந்தரத்தின் மகள் ஜோதி ஸ்ரீ துர்கா நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். நீட் தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தில் இன்று கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கு பலரும் அவர்களது இரங்கலை தெரிவித்தனர். மேலும் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்று பல அரசியல் காட்சிகள் கோரிக்கைகள் வைத்தனர். இந்நிலையில், திமுக தலைவர் முக ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அனிதா தொடங்கி ஜோதி ஸ்ரீ துர்கா வரை அஞ்சலி செலுத்துவதோடு எல்லாமும் முடிந்துவிடுகிறதா? அவர்கள் நம் வீட்டுக் குழந்தைகள் இல்லையா?. பயமா இருக்கு என எழுதி வைத்து இறந்திருக்கிறார் ஜோதிஸ்ரீ துர்கா. அடக்கு முறைகளையும், அநீதிகளையும் எதிர்த்து திமிறி எழுந்த இனம் நம் தமிழ் இனம்.
அந்தக் குணம் மாணவர்களுக்கும் அவசியம். போராடினால்தான் வெற்றி என்றால் போராடுவோம். எதிர்த்தால்தான் கதவு திறக்கும் என்றல் எதிர்த்து நிற்போம். மாணவர்களே, தைரியமாக இருங்கள், உங்களுக்காக போராட நாங்கள் இருக்கிறோம். திமுக இருக்கிறது. நான் இருக்கிறேன். திமுக ஆட்சி அமையும்போது நீட் தேர்வு ரத்து செய்யப்படும். நீட் தேர்வினால் வாய்ப்பை இழந்தவர்களுக்கு பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவம் படிக்க வாய்ப்பு உருவாக்கப்படும். எந்தப் போராட்டத்தையும் திமுக அரசு மேற்கொள்ளும். இது உறுதி என்றும் 8 மாதங்கள் பொறுத்திருங்கள், கலங்காதீர்கள், விடியல் பிறக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மாணவர்களே, தைரியமாக இருங்கள்! உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம்!
திமுக ஆட்சியில் #NEET ரத்து செய்யப்படும். வாய்ப்பை இழந்தவர்களுக்கு பொதுத்தேர்வு அடிப்படையில் மருத்துவம் படிக்க வாய்ப்பு உருவாக்கப்படும்.
எந்தப் போராட்டத்தையும் திமுக அரசு மேற்கொள்ளும்; இது உறுதி! #LetterToBrethren pic.twitter.com/GArjbRClDH
— M.K.Stalin (@mkstalin) September 12, 2020