ஜப்பானின் டோக்கியோவில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்.!
ஜப்பானின் டோக்கியோவில் இன்று காலை 08:14 மணிக்கு 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் டோக்கியோவின் 407 கி.மீ வடகிழக்கு பகுதியில் ஏற்பட்டது என்று நிலநடுக்கவியல் தேசிய மையம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த நிலநடுக்கத்தால் எந்தவிதமான உயிரிழப்பு மற்றும் பொருள் சேதங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.