கொரோனாவுக்கு மத்தியிலும் பிற நோயாளிகளுக்கு சிகிச்சைகள் தங்குதடையின்றி அளிக்கப்படுகிறது – அமைச்சர் விஜயபாஸ்கர்!

Default Image

கொரோனாவுக்கு மத்தியிலும் பிற நோயாளிகளுக்கு சிகிச்சைகள் தங்குதடையின்றி அளிக்கப்படுகிறது என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

கொரானா வைரஸ் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழகத்தில் கொரோனா காலத்திலும் கொரோனா அல்லாத பிற நோயாளிகளுக்கு சிகிச்சைகள் தங்குதடையின்றி சிறப்பான முறையில் நடைபெற்றதாக கூறியுள்ளார். மேலும் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் புற்றுநோயாளிகளுக்கு மிகச் சிறந்த சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது என அறிவுறுத்தியுள்ளார்.

6,664 நபர்களுக்கு வலி மற்றும் நிவாரண மையங்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 250 புற்றுநோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்று ஊரடங்கு காலத்தில் புற்றுநோயாளிகள் சிகிச்சையை இடைவிடாமல் தொடர்வதற்காக தமிழ்நாடு அரசின் 102 வாகன சேவை மூலம் புற்றுநோயாளிகளின் வீடுகளிலிருந்து மருத்துவமனைக்கும், சிகிச்சை முடிந்த பின்பு மீண்டும் அவர்களின் வீடுகளிலும் கொண்டு சேர்க்கப்பட்டனர்.  இவ்வாகன சேவையின் மூலம் மார்ச் 2020 முதல் இதுவரை 1396 நபர்கள் பயனடைந்துள்ளனர். 2020 மார்ச் மாதம் முதல் இதுவரை  1,31,352 நபர்களுக்கு புற்று நோய் சார்ந்த சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்