ஒன்றரை வயது குழந்தை முககவசம் அணியாததால் நிறுத்தப்பட்ட விமானம்!
கனடாவில் ஒன்றரை வயது குழந்தை முகக்கவசம் அணியவில்லை என்று விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே சென்றாலும், ஊரடங்கு அமலில் உள்ள போதே மக்களுக்காக அரசு சில கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகளை அறிவித்துள்ளது. இந்நிலையில், முக கவசம் அணிதல், கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல் என பொது இடங்களில் சில விதிமுறைகள் உள்ளது.
இந்நிலையில், கனடாவில் விமானம் ஒன்றில் ஒன்றரை வயது குழந்தை முக கவசம் அணிய வில்லை என்று விமான ஊழியர்கள் விமானத்தை எடுக்க மறுத்துள்ளனர். மூன்று வயது நிரம்பிய குழந்தைகளுக்கு மேல் தான் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற சட்டம் இருந்தபோதிலும் ஒன்றரை வயது குழந்தையான தங்களது மகள் முகக்கவசம் அணிய வில்லை என விமானத்தை வெகு நேரம் எடுக்காமல் இருந்ததாக குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
மேலும் ஊர்ந்து நடக்கக்கூடிய தனது மகளால் விமானம் நிறுத்தப்படுகின்றது என கடினமான சூழ்ந்தநிலையாலும், ஊருக்கு செல்ல வேண்டிய அவஸ்யம்ம் இருந்ததாலும், மகளுக்கு முககவாசத்தை போட்டு விட்டாலும் சிறிது நேரத்திலேயே மகள் வியர்வையால் அழுதுள்ளார், அதன் பின் கழற்றி எறிந்துள்ளார். இந்நிலையில் சில நிமிடங்களிலேயே விமானத்தின் கேப்டன் பாதுகாப்பு காரணங்களுக்காக விமானத்தில் இருந்து அனைவரையும் வெளியேற்றுகிறோம் எனக்கூறி விமானத்தை நிறுத்தி விட்டு பயணிகள் அனைவரும் கீழே இறங்கி உள்ளனர்.