முதல் முறையாக கொரோனா நோயாளிக்கு இரட்டை நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.!
முதல் முறையாக கொரோனா நோயாளிக்கு தெலுங்கானா மருத்துவர்கள் இரட்டை நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தனர்.
தெலுங்கானாவில் உள்ள ஒரு மருத்துவமனையின் மருத்துவர்கள் 32 வயதான கொரோனா நோயாளிக்கு நாட்டின் முதல் முறையாக இரட்டை நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்ததாக தெரிவித்தனர்.
அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நபருக்கு சர்கோயிடோசிஸ் என்ற நோய் ஏற்பட்டு அவரது நுரையீரல் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் போது அந்த நபர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார். இதனால் அவரது நிலைமை மோசமடைந்தது. இதனையடுத்து, சரியான நேரத்தில் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை சிர்த்து செய்து நோயாளியைக் காப்பாற்றி பின்பு நேற்று அந்த நோயாளி குணமடைந்து வீடு திரும்பினார்.