“இந்த 5 மாவட்டங்களில் 10-15 நாட்களில் கொரோனா உச்சத்தை தொடும்!”- தலைமை செயலர் சண்முகம்
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன்காரணமாக 4 ஆம் கட்ட தளர்வுகளுடனான ஊரடங்கு மாநிலம் முழுவதும் அமலில் உள்ளது. மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கையும் தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது.
இந்தநிலையில், தமிழகம் முழுவதும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை, சேலம், திருவண்ணாமலை, நாகை, கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் கொரோனா தொற்று அடுத்த 10 அல்லது 15 நாட்களில் உச்சத்தை தொடும் என்ற அச்சம் இருப்பதாக தலைமை செயலாளர் கே.சண்முகம் தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக அந்த 5 மாவட்டங்களில் காய்ச்சல் முகாம்களை அதிகாரிக்க வேண்டும், கொரோனா சிகிச்சை மற்றும் பரிசோதனை மையங்களை தயாராக வைக்க வேண்டும், கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும், அம்மாவட்டங்களுக்கு வரும் அனைவரையும் தீவிரமாக கவனிக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.