குற்றப்பின்னணி குறித்த விவரங்களை விளம்பரப்படுத்த வேண்டும் – தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு.!
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்த விவரங்களை விளம்பரப்படுத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் சட்டசபை தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களை நடத்தி முடிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதனிடையே, தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களில் பெரும்பாலானோர் ஏதேனும் குற்றப்பின்னணி கொண்டவர்களாக இருப்பதால், அதுபோன்ற நபர்களை தேர்தல்களில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது என இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கைகளை வலுத்து வந்த நிலையில், பலமுறை நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
இந்நிலையில், வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்த விவரங்களை விளம்பரப்படுத்துதல் குறித்து புதிய நெறிமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, குற்றப்பின்னணி குறித்த விவரங்களை அந்தந்த வேட்பாளர், கட்சிகள் 3 முறை செய்தித்தாள், தொலைக்காட்சிகளில் விளம்பரப்படுத்த வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் தேர்தல்களில் போட்டியிடும் குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் முடிவடைந்த பிறகு குற்றப் பின்னணி விவரங்களை வேட்பாளர் மற்றும் கட்சிகள் வெளியிட வேண்டும் என்றும் 4 நாட்களுக்கு முன்பு ஒரு முறையும், 5 மற்றும் 8 ஆவது நாட்களுக்குள் 2 ஆவது முறையும், வாக்குப் பதிவுக்கு 2 நாள் முன்னதாக 3 ஆவது முறையும் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் வெளியிட வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்ற வழக்குகள் குறித்துத் தேர்தல் ஆணையத்திடமும், செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சியில் விளம்பரம் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனை முறையாக வேட்பாளர்கள் கடைபிடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. எந்த பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டிருந்தாலும் குற்றப் பின்னணியை 48 மணி நேரத்திற்குள் இணையத் தளத்தில் வெளியிட வேண்டும் என்பதே விதியாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ECI streamlines instructions concerning Publicity of Criminal Antecedents by candidates concerned & by the Political parties https://t.co/4svyIhXhgt
— Sheyphali Sharan (@SpokespersonECI) September 11, 2020