ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் – வீடு தேடி சென்று கஞ்சா விற்பனை செய்தவர் கைது!

ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று மாணவர்கள் வீடு தேடி சென்று கஞ்சா விற்பனை செய்தவர் மதுரையில் கைது.
மதுரை மாவட்டத்திலுள்ள நாகமலை புதுக்கோட்டை பகுதியில் வாட்ஸ் அப் மூலமாகவும் நேரடியாக வீடுகளுக்கே சென்றும் கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் இரு சக்கர வாகனம் நிற்காமல் வேகமாக சென்று உள்ளது. இதனை தொடர்ந்து சந்தேகத்தின்பேரில் போலீசார் அவர்களை விரட்டி பிடித்து சோதனை செய்தனர்.
அப்பொழுது அவர்களிடம் இருந்து 8.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தியபோது, இந்த கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மதுரை பெத்தானியாபுரத்தை சேர்ந்த ராஜ பாண்டி என்பவர் மாணவர்களை குறிவைத்து ஒரு கஞ்சா பொட்டலம் வாங்கினால் மற்றொரு கஞ்சா பொட்டலம் இலவசம் என கூறி விற்பனையில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
April 29, 2025
“அந்த பையனுக்கு பயம் இல்ல” கிரிக்கெட் உலகத்தை திரும்பி பார்க்க வைத்த வைபவ்.! மொட்டை மாடி பயிற்சி வீடியோ.!
April 29, 2025
வைரல் வீடியோ: பஹல்காம் தாக்குதலுக்கு ஜிப்லைன் ஆப்ரேட்டர் காரணமா? சுற்றுலா பயணி அளித்த ஆதாரம்.!
April 29, 2025
தீவிரவாத தாக்குதல்…, நடிகர் அஜித் கேட்டு கொண்டது இதைத்தான்!
April 29, 2025
குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!
April 28, 2025